search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மு.பெ.சாமிநாதன்"

    • திருப்பூர் மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
    • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் மாநகரில் உள்ள 120 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 26,079 மாணவ மாணவிகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தினை திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 15 வேலம்பாளையம் அரசு பள்ளியில் மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.

    திருப்பூர் :

    தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.இதில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மானியகோரிக்கை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.அதில் திருப்பூர்மாவட்டம் காங்கேயத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ஆணையி ட்டுள்ளார்.

    இது காங்கேயம் பகுதி மக்களிடையே மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் காங்கேயத்தில் சிறுவிளையாட்டு அரங்கம்அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    • மாணவ, மாணவிகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 பக்கங்களையாவது படிக்க வேண்டும்
    • மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பின்னல் புக் டிரஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர் :

    தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 -வது திருப்பூா் புத்தகத் திருவிழா காங்கயம் சாலையில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் தொடங்கியது.

    தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதன் பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- இன்றைய காலகட்டத்தில் நூல்களைப் படிப்பது என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் எழுதும் பழக்கம் என்பது இளைஞா்களிடம் மிகவும் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது.

    பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 பக்கங்களையாவது படிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு செயல்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம்.

    மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் சாா்பில் 126 அரங்குகளும், அரசு சாா்பில் 26 அரங்குகள் என மொத்தம் 152 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த புத்தகத் திருவிழா பிப்ரவரி 5 ந் தேதி வரையில் 10 நாட்கள் நடைபெறுகிறது.  இங்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாள்களின் எண்ணிக்கையை மாவட்ட கலெக்டர் நீட்டித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன்.

    திருப்பூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி இங்கு வந்து செல்பவா்களும் இந்த புத்தகத் திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பின்னல் புக் டிரஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.
    • கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    காங்கயம் :

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தோ்தல் வாக்குறுதியின்படி கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    தமிழக மக்களின் நலனுக்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயிா் காப்போம், நம்மைக் காப்போம் - 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் 78 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    மேலும் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.20.33 கோடி கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல்சேர் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேர்களையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,21,941 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு கைபேசிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது .
    • முதன்மை மாநகராட்சியாக கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    திருப்பூர் :

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது . இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு ஆர்வி., நகர் பகுதியில் நடைபெற்ற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ. 101 கோடி மதிப்பீட்டில் 1036 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக மக்களின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மேம்படுத்தப்படும் எனவும் 21 மாநகராட்சிகளில் திருப்பூர் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாநில செய்தி துறை அமைச்சர் மு .பெ .சாமிநாதன், அரசு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று இல்லாமல் மக்களும் அதனை தொடர்ந்து கண்காணித்து அதில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பல்திவேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் , திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    • திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில், மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப்போட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் இன்று நடந்தது.

    விழாவில் திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் நாச்சிமுத்து, தலைவர் முருகேசன், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணை தலைவர்கள் ராம்தாஸ், செந்தூர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தம் மைதானத்தை திறந்து வைத்தார். செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்று பேசினார். தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கபடி கழக கொடியை துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஏற்றி வைத்தார்.

    பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    ×